வெள்ளோடு அருகே கீழ்பவானி வாய்க்காலில் மிதந்த ஆண் பிணம்
வெள்ளோடு அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஆண் பிணம் மிதந்தது
வெள்ளோடு அருகே உள்ள புங்கம்பாடியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் ஆண் பிணம் மிதப்பதாக வெள்ளோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெள்ளோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.பிணமாக மிதந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும். சந்தன கலர் சட்டை மற்றும் பச்சை கலர் டிராயர் அணிந்திருந்தார். மேலும் வலது கையில் சிவப்பு கயிறும் கட்டியிருந்தார். அவர் யார்?, எந்த ஊரைச்சேர்ந்தவர்?, எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை. இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.