வீரபாண்டி அருகே நீரில் மூழ்கி நெற்பயிா்கள் சேதம்: கண்மாய் கரையை சீரமைக்க வலியுறுத்தல்

வீரபாண்டி அருகே நீரில் மூழ்கி நெற்பயிா்கள் சேதமடைந்தன. இதனால் கண்மாய் கரையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2022-11-13 18:45 GMT

கம்பம் பள்ளத்தாக்கு கடைமடையான போடேந்திரபுரம், சடையால்பட்டி பகுதிகளில் இரு போக நெல் சாகுபடி நடைபெறும். தற்போது இந்த பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் நெல் விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் காமராஜபுரம் அம்மாகுளத்தில் உள்ள உபரி நீர் போடேந்திரபுர கண்மாய்க்கு வரும். போடேந்திரபுரம் கண்மாய் ஆக்கிரமிப்பால் முறையான கரை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் தண்ணீர் வயல்களுக்குள் புகுந்ததால் நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்து வருகின்றன. எனவே கண்மாய் கரை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்