வீரபாண்டி அருகே பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது

வீரபாண்டியில் பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-07-11 12:04 GMT

வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோட்டூர் பெருமாள் கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய கோட்டூரை சேர்ந்த சேதுபதி (வயது 54), மகேந்திரன் (58), தங்கமுத்து (70), அசோக் குமார் (35) உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 52 சீட்டு கட்டுகள், ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்