வரட்டுப்பள்ளம் அணை அருகேகுட்டியுடன் ரோட்டில் நடமாடிய யானைகள்

யானைகள்

Update: 2023-03-10 20:11 GMT

அந்தியூர் வனப்பகுதியில் இருந்து நேற்று மாலை 5 மணி அளவில் குட்டியுடன் 2 யானைகள் வெளியேறின. பின்னர் அவை வரட்டுப்பள்ளம் அணை அருகே உள்ள ரோட்டில் நடமாடின. அதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.

வாகன ஓட்டிகள் சற்று தூரத்திலேயே தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். இதனால் அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லக்கூடிய வாகனங்கள் ரோட்டின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. சுமார் ½ மணி நேரத்துக்கு பிறகு குட்டியுடன் 2 யானைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன்பின்னரே போக்குவரத்து நிலமை சீராகியது. தொடர்ந்து வாகனங்கள் அங்கிருந்து சென்றன.

Tags:    

மேலும் செய்திகள்