உளுந்தூர்பேட்டை அருகேவேன் கவிழ்ந்து 12 பக்தர்கள் காயம்மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது விபத்து

உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து 12 பக்தர்கள் காயமடைந்தனர். மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது.

Update: 2023-01-04 18:45 GMT

உளுந்தூர்பேட்டை, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நன்னாவரம் கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு ஒரு வேனில் சென்றனர். பின்னர் அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு அதே வேனில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். வேனை வேட்டவலத்தை சேர்ந்த கிருஷ்ணபிரபு ஓட்டினார்.

இவா்களது வேன், நேற்று மதியம் 1 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அடுத்த பரிக்கல் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று இவர்கள் வந்த வேன் மீது மோதுவது போல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர், லாரி மீது மோதாமல் இருக்க வேனை திருப்பினார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது.

12 பேர் காயம்

இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 12 பேர் காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய வேனை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்