தூத்துக்குடி அருகே கண்மாயில் மூழ்கி உப்பள தொழிலாளி சாவு

தூத்துக்குடி அருகே கண்மாயில் மூழ்கி உப்பள தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

Update: 2022-09-30 18:45 GMT

தூத்துக்குடி அருகே உள்ள துப்பாஸ்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 59). உப்பள தொழிலாளி. இவர் நேற்று மதியம் அந்த பகுதியில் உள்ள கண்மாயில் குளிப்பதற்காக சென்றாராம். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கி உள்ளார். இதில் மூச்சு திணறிய பரமசிவம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்