தூத்துக்குடி அருகே தொழிலாளிக்கு மதுபாட்டில் குத்து
தூத்துக்குடி அருகே தொழிலாளி மதுபாட்டிலால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்தார்.
ஸ்பிக் நகர்:
நாகப்பட்டினம் நரிமன் சுள்ளங்கால் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 33). இவர், முத்தையாபுரம் பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கி தனியார் நிறுவனத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 9 மணி அளவில் அவரது நண்பர்கள் இருவருடன் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு ஸ்பிக் நகர் பஜாரில் நடந்து வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது முத்தையாபுரம் சுபாஷ் நகரை சேர்ந்த ராஜலிங்கம் மகன் சங்கரேஸ்வரன் என்ற எலி (24) அய்யப்பனை அவதூறாக பேசி, மதுபாட்டிலால் தாக்கினார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். தடுக்க முயன்ற அவரது நண்பர்களையும் சங்கரேஸ்வரன் தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்த அய்யப்பன் தூத்துக்குடி அரசினர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் மகாராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.