தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது.

Update: 2022-10-27 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி முத்தையாபுரம் ஆனந்த் நகரைச் சேர்ந்தவர் நல்லதம்பி.இவரது மகன் மனுவேல் (வயது 36). இவர், அவரது மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் இரவு வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். காலையில் எழுந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் தீவைக்கப்பட்டு முழுவதுமாக எரிந்து சேதமடைந்திருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்த நபரை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்