தூத்துக்குடி அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு

தூத்துக்குடி அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் இறந்து போனார். அவரது குடும்பத்தினருக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல் கூறினார்.

Update: 2022-11-16 18:45 GMT

தூத்துக்குடி திரேஸ்புரம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் செல்வம். இவர் நேற்று முன்தினம் மீன்பிடித்து விட்டு திரும்பி வந்த போது, எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்தார். இதில் பரிதாபமாக செல்வம் இறந்தார். அவரது உடலை நேற்று முன்தினம் இரவு சக மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இறந்த மீனவர் செல்வத்தின் வீட்டுக்கு தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி நேற்று நேரில் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண உதவியும் வழங்கினார். அப்போது அமைச்சர் கீதாஜீவன் உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்