தூத்துக்குடி அருகேபி.எஸ்.என்.எல். அலுவலக கதவை உடைத்த தொழிலாளி சிக்கினார்
தூத்துக்குடி அருகே பி.எஸ்.என்.எல். அலுவலக கதவை உடைத்த தொழிலாளி சிக்கினார்
புதுக்கோட்டை பாக்கியலட்சுமி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் குடிபோதையில், அந்த பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் முன்பக்க கண்ணாடி கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து உள்ளார். அங்கு இருந்த நாற்காலிகளையும் சேதப்படுத்தினாராம்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தார்.