தூத்துக்குடி அருகேஅனாதையாக நின்ற கார் மீட்பு

தூத்துக்குடி அருகே அனாதையாக நின்ற காரை மீட்டுபோலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-01-11 18:45 GMT

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காவடிமுருகன் முத்துசாமி கோவில் பகுதியில் கேட்பாரற்று நின்ற காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தருவைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த கார் யாருடையது, எதற்காக அங்கு நிறுத்தப்பட்டு இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்