தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
தூத்துக்குடி தாமோதரன் நகரை சேர்ந்தவர் தங்க காசி (வயது 28). இவர் தனது நண்பர் சின்னகண்ணு புரத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவருடன் நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். வாகைகுளம் அருகே வந்தபோது ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த தங்க காசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயம் அடைந்த ஸ்டீபன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.