தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் பலி

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் பலியானார்.

Update: 2023-07-30 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருக மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் பரிதாபமாக பலியானார்.

ஜெராக்ஸ் கடை

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் தவசி பெருமாள் சாலை, குமாரசாமி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் அருணாகரன் (வயது 38). திருமணமாகாதாவர். இவர் வீடு அருகில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் மதியம் தூத்துக்குடிக்கு பஸ்சில் செல்வதற்காக, கடையில் இருந்து சாலைஓரத்தில் பஸ் நிறுத்தம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிள் மோதியது

ஸ்பிக் நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் தூக்கி சாலையில் வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்