டி.என்.பாளையம் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது

டி.என்.பாளையம் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-05-09 21:35 GMT

டி.என்.பாளையம் அருகே உள்ள கே.என்.பாளையம் நரசாபுரம் பள்ளம் பகுதியில் பங்களாப்புதுார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கே.என்.பாளையம் நரசாபுரம் மாவுமில் வீதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 32) என்பவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தங்கராஜை கைது செய்து, அவரிடம் இருந்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்