திருச்செந்தூர் அருகேவிபத்தில் தொழிலாளி பலி

திருச்செந்தூர் அருகே நடந்த விபத்தில் தொழிலாளி பலியானார்.

Update: 2023-01-19 18:45 GMT

திருச்செந்தூர்:

உடன்குடி புதுமனை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ராஜன் மகன் ராபின்சன் (வயது 19). இவரது நண்பர் சமத்துவபுரத்தை சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் ஐகோர்ட் மகாராஜா (25). தொழிலாளியான இவர்கள் நேற்று முன்தினம் குரும்பூரில் உள்ள ராபின்சன் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு ஊருக்கு திரும்பி சென்றனர். சோனக்கன்விளை சென்ற போது எதிரே வேகமாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஐகோர்ட் மகாராஜா உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகாலெட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்