திருச்செந்தூர் அருகேமோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து நாசம்
திருச்செந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து நாசமாகியது. அதில் பயணம் செய்த கணவன், மனைவி உயிர்தப்பினர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து நாசமானது. அதில் பயணம் செய்த கணவன்-மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கணவன்-மனைவி
திருச்செந்தூர் அருகே கீழநாலுமூலைகிணறு முருகன்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 52). தொழிலாளியான இவரது மனைவி சேர்மக்கனி.
நேற்று பகலில் ஆனந்தராஜ் தனது மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் நெறிஞ்சுமுள் எடுப்பதற்காக பிச்சுவிளை சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தது
அப்போது, ஆனந்தராஜ் தனது கால் சுடுவதை கண்டு ேமாட்டார் சைக்கிளை நிறுத்தி, மனைவியையும் கீழே இறக்கினார். அந்த சமயத்தில் திடீரென்று மோட்டார் சைக்கிள் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் மணலால் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
பின்னர் அந்த வழியாக வந்தவர்களின் உதவியுடன் சிறிது தூரத்தில் தொட்டில் கிடந்த தண்ணீரை எடுத்து வந்து ஊற்றி தீயை அணைத்தனர்.
உயிர் தப்பினர்
இருந்தபோதிலும் மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசமானது. தீப்பிடிப்பதற்கு முன் மோட்டார் சைக்கிளில் இருந்து கணவன்-மனைவி இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.