தேனி அருகே மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தேனி அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-07-11 15:03 GMT

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி தண்ணீர்தொட்டி தெருவை சேர்ந்த தயாகர் ரெட்டி மகள் கோபிகா சிந்து (வயது 13). தேனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று கோபிகா சிந்து தனது வீட்டின் படுக்கை அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை அவருடைய குடும்பத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக துப்பட்டாவை அறுத்து அவரை கீழே இறக்கினர்.

மயக்க நிலையில் இருந்த அவரை பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து தேனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். அவருடைய தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து அவருடைய தந்தை தயாகர் ரெட்டி கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்