தேனி அருகே தூய்மை பணியாளர்களுக்கு கொலை மிரட்டல்

தேனி அருகே தூய்மை பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-10-08 16:32 GMT

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. இந்த பணியில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளா்கள் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பழனிசெட்டிபட்டி தென்றல் நகரை சேர்ந்த முத்துக்குமார் உள்பட 4 பேர், அவர்களை தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சந்திரகலா பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்