தேனி அருகேமூதாட்டி மீது தாக்குதல்

தேனி அருகே மூதாட்டியை தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-03-17 18:45 GMT

தேனி அருகே மாரியம்மன்கோவில்பட்டியை சேர்ந்த நடராஜன் மனைவி கருப்பாயி (வயது 71). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மகாராஜன் என்பவருக்கும் பாதை பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில், கருப்பாயியை மகாராஜன், அவருடைய மனைவி ரஞ்சனி ஆகியோர் தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின்பேரில், மகாராஜன், ரஞ்சனி ஆகிய 2 பேர் மீதும் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்