தட்டார்மடம் அருகேவிபத்தில் தொழிலாளி படுகாயம்
தட்டார்மடம் அருகே விபத்தில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள நடுக்குறிச்சி சண்முகபுரத்தை சேர்ந்த சுயம்புதுரை மகன் முத்துக்குமார் (வயத 48). இவர் திருச்செந்தூரில் சுமைதூக்கும் தொழிலாளியாக இருந்து வருகிறார். நேற்றுமுன் தினம் இரவு மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூரில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். சண்முகபுரம் அருகில் வந்தபோது எதிரே வந்த ஆம்னி பஸ் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமார் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.