தட்டார்மடம் அருகேவிஷம் குடித்து மூதாட்டி சாவு
தட்டார்மடம் அருகே விஷம் குடித்து மூதாட்டி இறந்து போனார்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே நல்லூர் முகுந்தன் விளையைச் சேர்ந்தவர் சுயம்பு மனைவி நட்சத்திரக்கனி (வயது 75). இவர்களுக்கு 3 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். சுயம்பு, நட்சத்திரக்கனி ஆகியோர் பண்ணை வீட்டில் இருந்து வந்தனர். நட்சத்திரக்கனிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19-ந்தேதி அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்துள்ளது. இதனால் நட்சத்திரக்கனி, முருங்கைக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
காய்ச்சல் என நினைத்து ஆஸ்பத்திரிக்கு தாயை அவரது மகன் கதிரவன் அழைத்து சென்றபோது நட்சத்திரக்கனி விஷம் குடித்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நட்சத்திரக்கனி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவருைடய மகன் கதிரவன் அளித்த புகாரின் பேரில், தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.