தாளவாடி அருகே ஆட்டை கடித்து குதறிய மர்ம விலங்கு

தாளவாடி அருகே ஆட்டை மர்ம விலங்கு கடித்து குதறியது.

Update: 2023-06-12 21:16 GMT

தாளவாடி

தாளவாடி அருகே உள்ள ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாஷாஷெரீப். விவசாயி. இவர் ஆடு, மாடுகளும் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் ஆடுகளை தன்னுடைய வீட்டின் முன்பு கட்டி வைத்து விட்டு தோட்டத்துக்கு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது வீட்டில் கட்டப்பட்டு இருந்த ஒரு ஆடு கடித்து குதறப்பட்டு ரத்த வழிய கத்திக்கொண்டு இருந்தது. இதுபற்றி தாளவாடி வனத்துறைக்கு பாஷாஷெரீப் தகவல் கொடுத்தார்.

அருகே உள்ள தாளவாடி வனச்சரகத்தில் இருந்து சிறுத்தைபுலியோ, புலியோ வந்து ஆட்டை கடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அது எந்த மர்ம விலங்கு என்று தெரியவில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்