தாளவாடி அருகேஊருக்குள் புகுந்து புலி அட்டகாசம்;2 மாடுகளை அடித்துகொன்றதுவிவசாயிகள் பீதி

விவசாயிகள் பீதி

Update: 2023-02-15 20:27 GMT

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த புலி 2 பசு மாடுகளை அடித்துக்கொன்றது. இதனால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

2 பசு மாடுகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள சேஷன்நகர் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (வயது37). இவர் தனது வீட்டின் முன்பு 2 பசு மாடுகளை கட்டி வளர்த்து வருகிறார். இந்த நிலையில் சிவராஜ் நேற்று காலை வீட்டு்க்கு வெளியே வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பு கட்டியிருந்த அவரது ஒரு பசு மாட்டை காணவில்லை. மற்றொரு பசு மாட்டின் பின்பகுதி ரத்த காயத்துடன் இருந்தது. ஏதோ ஒரு மர்ம விலங்கு அந்த மாட்டை கடித்திருந்தது தெரிய வந்தது.

புலி கொன்றது

இதனால் சிவராஜ் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர் அங்கு சென்று, படுகாயத்துடன் கிடந்த பசு மாட்டை பார்வையிட்டனர். பின்னர் அந்த மாட்டுக்கு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தார். அதன்பின்னர் காணாமல் போன மற்றொரு மாட்டை வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் தேடி சென்றனர்.

அப்போது சேஷன் நகர் அருகே உள்ள ஒரு மானாவரி நிலத்தில் காணாமல் போன பசுமாடு இறந்து கிடந்தது. அதன் பின் பகுதி கடித்து குதறப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் இருந்தது. அந்த மாட்டின் அருகே விலங்கின் கால்தடம் பதிவாகியிருந்தது. அந்த கால்தடத்தை வனத்துறையினர் பதிவு செய்தனர். இதில் அந்த கால்தடம் புலியினுடையது என்பது தெரியவந்தது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி ஒன்று ஊருக்குள் புகுந்து சிவராஜ் வீட்டு முன்பு கட்டப்பட்டிருந்த ஒரு பசு மாட்டை தாக்கியதும், மற்றொரு மாட்டை இழுத்து சென்று அடித்து கொன்றுவிட்டு போட்டுவிட்டு சென்றதும் தெரிய வந்தது.

ஊருக்குள் புகுந்து 2 மாடுகளை புலி அடித்துக்கொன்றுள்ளதால் அந்த பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

விவசாயிகள் கோரிக்கை

இது தவிர கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன கெய்சர் என்ற விவசாயியின் பசு மாட்டின் எலும்பு கூடு அதே பகுதியில் கிடைத்தது. அந்த பசு மாட்டையும் புலி தான் இழுத்து சென்று அடித்து கொன்று தின்றுவிட்டு போட்டு சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, 'சேஷன் நகர் பகுதியில் ஏற்கனவே புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் புகுந்து ஆடு, மாடுகளை அடித்து கொன்றுள்ளது. தற்போது மீண்டும் ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. இதனால் நாங்கள் பீதியில் உறைந்து உள்ளோம். மனிதர்களை தாக்கும் முன்பு விரைவில் கூண்டு வைத்து புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்