தட்டார்மடம் அருகே தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
தட்டார்மடம் அருகே தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பு தெற்கு தெருவைச் சேர்ந்த ஜெயானந்த் செல்வன் மகன் ரித்திஷ் விபின் (வயது 22). இவரை குடும்ப பிரச்சினை காரணமாக தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரித்தீஸ் விபின் கடந்த 29-ந்தேதி விவசாயத்துக்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுககரசு வழக்குப்பதிவு ெசய்து விசாரித்து வருகிறார்.