சிறுபாக்கம் அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்

சிறுபாக்கம் அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-26 18:45 GMT

சிறுபாக்கம், 

சிறுபாக்கம்‌ அடுத்த கொளவாய் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஊாாட்சி சார்பில் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக அப்பகுதி மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக வயல்வெளிகளில் உள்ள கிணறுகளில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

காலி குடங்களுடன் போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை காலி குடங்களுடன் கொளவாய் பஸ் நிறுத்தம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பழுதடைந்த மின்மாற்றியை உடனடியாக சீரமைத்து முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். ஆனால் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால், அவர்களாகவே போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்