ஸ்பிக்நகர் அருகே பள்ளிக்கூட பஸ் கண்ணாடியை உடைத்து ரகளை: 4 பேருக்கு வலைவீச்சு

ஸ்பிக்நகர் அருகே பள்ளிக்கூட பஸ் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட 4 பேரை போலீார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-11-24 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மகன் பேச்சிமுத்து (வயது40). இவர் தூத்துக்குடியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளியில் இருந்து மாணவிகளை ஏற்றிகொண்டு ஸ்பிக்நகர் சுற்று வட்டார பகுதியில் உள்ள அவரவர் வீடுகளில் இறக்கி விடுவதற்காக பஸ்சை ஓட்டி வந்து கொண்டிருந்தார். பண்ணைநகர் அருகே பஸ் வந்து கொண்டிருந்தபோது 4 மர்நபர்கள் திடீரென்று பஸ்சை வழி மறித்து பேச்சிமுத்துவை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். அவர்கீழே இறங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 4 பேரும் கற்களை முன்பக்க கண்ணாடியில் வீசி ரகளையில் ஈடுபட்டனர்.

இதில் பஸ் கண்ணாடி முழுவதும் உடைந்து சிதறி கீழே விழந்தது. பஸ்சில் இருந்த மாணவிகள் அலறினர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் பேச்சிமுத்துவுக்கு கொலை மிரட்டுதல் விடுத்து விட்டு அந்த 4பேரும் தப்பி ஓடிவிட்டனராம். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 4 மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்