சங்கராபுரம் அருகே கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

சங்கராபுரம் அருகே கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

Update: 2022-09-08 15:43 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே உள்ள செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னபாண்டி மனைவி மாலா. இவருடைய பசு மாடு ஒன்று அப்பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மாடு அப்பகுதியில் கிணற்றில் தவறி விழுந்தது. இதுபற்றி அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ்குமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்