செஞ்சி அருகே மகளிர் வாழ்வாதார சேவை மையம் கலெக்டர் மோகன் திறந்து வைத்தார்

செஞ்சி அருகே மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை கலெக்டர் மோகன் திறந்து வைத்தார்.

Update: 2022-09-28 18:45 GMT

செஞ்சி, 

செஞ்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஒட்டம்பட்டு ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மைய திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் ஆர்.விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் முன்னிலை வகித்தார். ஒட்டம்பட்டு ஊராட்சி தலைவர் பிரேமா திருமலை வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் மோகன் கலந்து கொண்டு மகளிர் வாழ்வாதார சேவை மைய கட்டிடத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். மேலும் 10 புதிய தொழில் முனைவோர்களுக்கு சுய தொழில் புரிவதற்காக ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் வங்கி மானியத்திற்கான கடனுதவியையும், 40 பயனாளிகளுக்கு உதயம் பதிவு சான்றிதழ்களையும் வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், புதிய தொழில் முனைவோருக்கு திட்டம் மற்றும் மதிப்பீடு தயாரித்தல், வங்கிகளில் இருந்து கடன் பெறுவது, பான்கார்டு மற்றும் ஜி.எஸ்.டி. தொடர்பான விவரம் தெரிவிப்பது போன்ற அனைத்து விவரங்களை ஒரே இடத்தில் தெரிவிப்பதுதான் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தின் முக்கிய நோக்கமாகும். எனவே ஒவ்வொரு மகளிரும் வாழ்வாதார சேவை மையத்தினை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். இதில் மாவட்ட திட்ட அலுவலர் காஞ்சனா, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் ஷீலாதேவிசேரன், மாவட்ட கவுன்சிலர் அரங்க. ஏழுமலை, வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் ராஜேஷ்குமார், செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர் வேங்கடசுப்பிரமணியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்