செஞ்சி அருகே வாலிபரை மிரட்டி நகை பணம் பறிப்பு
செஞ்சி அருகே வாலிபரை மிரட்டி நகை பணம் பறித்து சென்றது தொடா்பாக போலீசாா் விசாரைண நடத்தி வருகின்றனா்.
செஞ்சி,
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள தானிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் மகன் தீனதயாளன்(வயது 21). இவர் செஞ்சியில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் செஞ்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆலம்பூண்டி ஏரிக்கரை அருகே வந்துகொண்டிருந்தபோது இயற்கை உபாதை கழிப்பதற்காக மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்தினார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் தீனதயாளனை மிரட்டி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலி, செல்போன் மற்றும் ரூ.200 பணம் ஆகியவற்றை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.