சத்தியமங்கலம் அருகேபீடி புகைத்த போதுதீயில் கருகி முதியவர் சாவுதீக்குச்சியை படுக்கையில் போட்டதால் பரிதாபம்
பீடி புகைத்த போது தீயில் கருகி முதியவர் ,இறந்தாா்..
சத்தியமங்கலம் அருகே புகைப்பதற்காக பீடியை பற்ற வைத்துவிட்டு தீக்குச்சியை படுக்கையில் போட்டதால் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி முதியவர் உயிரிழந்தார்.
பீடியை பற்ற வைத்துவிட்டு...
சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் அரசன் மேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (வயது 71). இவருடைய மனைவி சுப்பம்மாள் (68). வயது முதிர்வு காரணமாக சுப்பையாவுக்கு கண் பார்வை குறைபாடு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுப்பம்மாள் நேற்று முன்தினம் பூப்பறிக்கும் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சுப்பையா இருந்து உள்ளார். அப்போது பீடி புகைப்பதற்காக தீக்குச்சியை எடுத்து பற்ற வைத்து உள்ளார். பீடியை பற்ற வைத்ததும், தீக்குச்சியை வீசி உள்ளார். ஆனால் அந்த தீக்குச்சி அவருடைய படுக்கையில் விழுந்ததாக கூறப்படுகிறது.
சாவு
பின்னர் சிறிது நேரத்தில் படுக்கையில் பற்றிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதில் அவருடைய உடலிலும் தீப்பற்றியது. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சுப்பையாவின் உடலில் பற்றிய தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.