சத்தியமங்கலம் அருகே வாய்க்காலில் குளித்த வாலிபர் இழுத்து செல்லப்பட்டார் கதி என்ன? தேடும் பணி தீவிரம்

தேடும் பணி தீவிரம்

Update: 2022-11-21 19:55 GMT

சத்தியமங்கலம் அருகே உள்ள போக்குவரத்து நகரை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 22). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மதியம் தனது நண்பர்களுடன் வேட சின்னனூரில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு குளிக்க சென்றார்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அண்ணாமலை தண்ணீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார். உடனே அருகில் குளித்து கொண்டு இருந்த நண்பர்கள் நம்பியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வாய்க்காலில் இறங்கி அண்ணாமலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை 6 மணி வரை தேடியும் அண்ணாமலை கிடைக்கவில்லை. இருள் சூழ்ந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

வாய்க்காலில் இழுத்து செல்லப்பட்ட அண்ணாமலை கதி என்ன? என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக அவரை தேடும் பணி நடக்கிறது. மேலும் இதுபற்றி புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்