சாத்தான்குளம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலம் மீட்பு
சாத்தான்குளம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தை நேற்று வருவாய்த்துறையினர் மீட்டனர்.
அரசு நிலம் ஆக்கிரமிப்பு
சாத்தான்குளம் தாலுகா அறிவான்மொழியில் அரசுக்கு சொந்தமான இடத்தை அதே ஊரைச் சேர்ந்த தனியார் ஒருவர் ஆக்கிரமித்து முள் வேலி அமைத்து வாழை தோட்டம் அமைத்து இருந்தார்.
இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் சாத்தான்குளம் தாசில்தாருக்கு புகார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் புகார்
இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தலைமையில் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் வருவாய் ஆய்வாளர் ஜெயா, கட்டாரிமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன், குறுவட்ட அளவர் ஜெயசுதா ஆகியோர் பார்வையிட்டு நேற்று அளவீடு செய்தனர். அதில் அரசு இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து வாழைத்தோட்டம் அமைத்து இருந்தது தெரியவந்தது.
நிலம் மீட்பு
இதையடுத்து ஆக்கிரமிப்பு வாழைத்தோட்டத்தை அகற்றி அரசு நிலத்தை வருவாய்த் துறையினர் மீட்டனர்.
மேலும் அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் யாராவது ஆக்கிரமிப்பது செய்வது கண்டறியப்பட்டால், உரியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அரசு நிலம் முறைப்படி மீட்கப்படும் என வருவாய்த்துறையினர் ெதரிவித்தனர்.