ரிஷிவந்தியம் அருகே பள்ளி மேலாண்மை குழுவினர் ஆர்ப்பாட்டம்
ரிஷிவந்தியம் அருகே பள்ளி மேலாண்மை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் அடுத்த அத்தியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி வாணாபுரம், பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள மும்முனை சந்திப்பில் அரசு பள்ளி மேலாண்மை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராமாயி தலைமை தாங்கினார். துணை தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அரசு பள்ளி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருப்பதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
1 முதல் 3 வகுப்புகளுக்கான எண்ணறிவு, எழுத்தறிவு, 4 முதல் 8 வரை வகுப்புகளுக்கான கற்றல் விளைவுகள் பற்றிய விவரங்களையும் அதனை மேம்படுத்துவதற்கான செயல் திட்டங்களையும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும், மாணவிகளுக்கு கழிவறை மற்றும் நான்கு வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும், மழைக்காலங்களில் ஒழுகுகின்ற வகுப்பறை கட்டிடத்தை செப்பனிட வேண்டும், தரமான சத்துணவு குழந்தைகள் உணவு உண்ணுவதை கண்காணித்தல் மற்றும் ஒழுங்கு படுத்த வேண்டும், பள்ளி மேலாண்மை குழு என்பது சட்டப்படியான அமைப்பு அதன் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து துறைகளும் முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.