புளியம்பட்டி அருகேகிராமங்களில் சாதி அடையாளங்களை அழித்த பொதுமக்கள்

புளியம்பட்டி அருகே கிராமங்களில் சாதி அடையாளங்களை பொதுமக்கள் அழித்தனர்.

Update: 2023-08-16 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

புளியம்பட்டி அருகே போலீசாரின் மாற்றத்தைதேடி கூட்டம் எதிரொலியாக, கிராமங்களிலுள்ள பொதுஇடங்களில் இருந்து சாதி அடையாளங்களை பொதுமக்கள் அழித்தனர்.

மாற்றத்தை ேதடி கூட்டம்

ஓட்டப்பிடாரம் தாலுகா புளியம்பட்டி அருகே சவலாப்பேரியில் கடந்த 9-ந்தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் தலைமையில் அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் சமூக நல்லிணக்கம் மற்றும் மாற்றத்தை தேடி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் புளியம்பட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட புளியம்பட்டி, அக்காநாயக்கன்பட்டி, ஒட்டுடன்பட்டி, பூவாணி, சவலாப்பேரி, ஆலந்தா, சிங்கத்தாகுறிச்சி, காசிலிங்காபுரம், கொடியன்குளம், நாரைக்கிணறு, மருதன்வாழ்வு மற்றும் கொல்லங்கிணறு கிராமங்களை சேர்ந்த அனைத்து சமுதாயமக்கலும் கலந்து கொண்டனர்.

சாதி அடையாளங்கள் அழிப்பு

கூட்டத்தில் வன்முறையை தடுப்பது சம்மந்தமாகவும், சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்தவது தொடர்பாகவும், பொது இடங்களிலும் கல்வி நிலையங்களிலும் வன்முறையை தூண்டக்கூடிய சாதிய அடையாளங்களை அறவே நீக்கி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக்கொண்டார்.

இதைதொடர்ந்து நேற்று முன்தினம் மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையில் புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதிஷ்நாராயணன் மற்றும் போலீசார் முன்னிலையில் ஆலந்தா, சிங்கத்தாகுறிச்சி, காசிலிங்காபுரம் கிராமங்களில் தெருக்கள், பஸ்நிறுத்தம், தகவல் பலகை, மின்கம்பங்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் இருந்த சாதிய அடையாளங்களை அழித்தனர்.

சாதிய அடையாளங்களை தாமாக முன்வந்து அழித்த கிராம மக்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்