புதுக்கோட்டை அருகே விபத்தில் சிக்கி நிலபுரோக்கர் சாவு
புதுக்கோட்டை அருகே விபத்தில் சிக்கி நிலபுரோக்கர் இறந்து போனார்.
புதுக்கோட்டை அருகே உள்ள மேலகூட்டுடன்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி (வயது 45). நில புரோக்கர். இவர் நேற்று முனதினம் இரவு மங்களகிரியில் உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். மேல கூட்டுடன்காடு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த மந்திரமூர்த்தியை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.