புதுச்சத்திரம் அருகே கொள்ளையர்களிடம் இரும்பு பொருட்கள் வாங்கிய 2 பேர் கைது
புதுச்சத்திரம் அருகே கொள்ளையர்களிடம் இரும்பு பொருட்கள் வாங்கிய 2 பேர் கைது
புதுச்சத்திரம்,
புதுச்சத்திரம் அருகே பெரியகுப்பத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை உள்ளது. செயல்படாத இந்த ஆலையை குறிவைத்து கொள்ளையர்கள் இரும்பு பொருட்களை திருடிச்செல்கிறார்கள். இவ்வாறு திருடுபவர்களிடம் இருந்து இரும்பு பொருட்களை சிலர் வாங்கி, விற்பனை செய்து வருகிறார்கள். இது தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆண்டார்முள்ளிபள்ளத்தை சேர்ந்த ராபர்ட் முல்லை ராஜா (வயது 33), சிவகேசன் (52) உள்பட 6 பேர் கொள்ளையர்களிடம் இருந்து இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ராபர்ட் முல்லை ராஜா, சிவகேசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.