கம்பம் அருகே இளம்பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு

கம்பம் அருகே இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் ைகது செய்தனர்

Update: 2022-07-04 17:10 GMT

கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியை சேர்ந்தவர் பழனி முருகன் (வயது 39). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பவித்ரா (27). கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். பவித்ரா அதே ஊரில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று பழனி முருகன், பவித்ராவை பார்ப்பதற்காக அவரது கடைக்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பழனி முருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பவித்ராவை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் பழனி முருகன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பவித்ராவை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே போலீஸ் நிலையத்தில் சரணடைந்த பழனி முருகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்