கம்பம் அருகேஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய ஓடை

கம்பத்தில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய ஓடையை மீட்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2023-10-08 18:45 GMT

கம்பம் மேற்கு பகுதியான ஏகலூத்து மலை அடிவாரத்தில் ஏராளமான ஓடைகள் உள்ளன. இந்த ஓடைகள் கம்பம் சின்னவாய்க்கால் மற்றும் குளங்களுக்கு சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டன. இந்த ஓடைகளில் தண்ணீர் வரும் போது அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனை நம்பி விவசாயிகள் தென்னை, வாழை உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இதேபோல் மஞ்சக்குளம் சின்னவாய்க்காலை சென்றடையும் பைத்தியகாரன் ஓடை ஆங்கூர்பாளையம் சாலையை கடந்து செல்கிறது.

இந்நிலையில் ஆங்கூர்பாளையம் சாலை வழியாக செல்லும் பைத்தியகாரன் ஓடையில் கட்டுமான கழிவுகள் மற்றும் குப்பைகளை மர்மநபர்கள் கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரம் கேள்வி குறியாக உள்ளது. மேலும் தொடர்ந்து அப்பகுதியில் குப்பைகளை கொட்டி வருவதால் பைத்தியகாரன் ஓடை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தற்போது இருந்த இடமே தெரியாமல் மறைக்கப்பட்டு வருகிறது. எனவே ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்