பெரியகுளம் அருகேவாலிபர் சாவில் சந்தேகம் என புகார்
பெரியகுளம் அருேக வாலிபர் சாவில் சந்தேகம் என அவரது தம்பி போலீசில் புகாா் கொடுத்தார்.
பெரியகுளம் அருகே உள்ள அழகர்சாமிபுரம், அண்ணாநகரை சேர்ந்தவர் அழகுராஜா (வயது 34). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மீனா. கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அழகுராஜா வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து உறவினர்கள் அழகுராஜாவின் தம்பி கார்த்திகேயனுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வீட்டிற்கு வந்த கார்த்திகேயன், அழகுராஜா உடலை பார்த்து கதறி அழுதாா். பின்னர் கார்த்திகேயன் பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், தனது அண்ணன் அழகுராஜா சாவில் சந்தேகம் இருப்பதால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.