பெரியகுளம் அருகேகிணற்றில் தவறி விழுந்த வாலிபர் மீட்பு

பெரியகுளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் மீடகப்பட்டார்.

Update: 2023-04-16 18:45 GMT

பெரியகுளம் அருகே உள்ள பங்களாப்பட்டியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 28). நேற்று இவர், பங்களாப்பட்டி பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த சுமார் 60 அடி ஆழ விவசாய கிணற்றில் கால் தவறி விழுந்தார். கிணற்றில் 10 அடிக்கு தண்ணீர் இருந்ததால் அவர் தத்தளித்து கொண்டிருந்தாார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர். பின்னர் அவர்கள் பெரியகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துசெல்வம் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி காமராஜை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்