பெரியகுளம் அருகே மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்; வாலிபர் பலி
பெரியகுளம் அருகே மோட்டார்சைக்கிள்-வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
பெரியகுளம் அருகே உள்ள எ.புதுப்பட்டியை சேர்ந்தவர் தினகரன் (வயது 30). தனியார் மில்லில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர், காமாட்சிபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் எ.புதுப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். மதுரை-பெரியகுளம் சாலையில் எ.புதுப்பட்டியை அடுத்த தனியார் பெட்ரோல் விற்னை நிலையம் அருேக சென்றபோது, எதிரே வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தினகரன் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரான விக்னேஷ்வர் (28) என்பவரை கைது செய்தனர்.