பெரியகுளம் அருகே பசுவை அடித்து கொன்ற சிறுத்தை : கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை
பெரியகுளம் அருேக பசுவை அடித்து கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரி்க்ைக விடுத்தனர்.
பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு பெரியகுளத்தை அடுத்த கைலாசப்பட்டி மலைப்பகுதியில் மாந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் பசு ஒன்றை வளர்த்து வந்தார். இவர் நேற்று தோட்டத்திற்கு சென்றார். அப்போது பசு உடல் கீறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. பாதி உடல் மட்டுமே கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பசுவின் உடலை கால்நடை டாக்டர் மூலம் பரிசோதனை செய்து புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பசுைவ சிறுத்தை அடித்து கொன்றுள்ளது, அது பசுவின் பாதி உடலை தின்று விட்டு மீதியை போட்டு சென்றுள்ளது என்றனர். எனவே தோட்ட பகுதியில் அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.