பெரியகுளம் அருகே100 மதுபான பாட்டில்கள் பறிமுதல்:தொழிலாளி கைது
பெரியகுளத்தில் 100 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரியகுளம் தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனுசுயா மற்றும் போலீசார் ஜல்லிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து மோட்டார்சைக்கிளை சோதனை செய்தனர். அதில் 100 மதுபான பாட்டில்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சருத்துப்பட்டியை சேர்ந்த தொழிலாளியான நாகராஜ் (வயது 42) என்பதும், விற்பனைக்காக மதுபான பாட்டில்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.