பென்னிகுயிக் நினைவு மணிமண்டபம் அருகே சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்: சுற்றுலா பயணிகள் கோரிக்கை

கூடலூர் அருேக பென்னிகுயிக் நினைவு மணிமண்டபம் அருகே சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-10-03 16:21 GMT

முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் நினைவை போற்றும் வகையில் தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்பில் தமிழக அரசு சார்பில் அவருக்கு மணிமண்படம் கட்டப்பட்டு உள்ளது. தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளதால் கேரள மாநிலத்தில் உள்ள தேக்கடிக்கு தினசரி படகு சவாரி செய்ய வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இந்த மணிமண்டபத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.

ஆனால் இங்கு உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவது இல்லை. அதே போல் சுகாதார வளாகமும் பூட்டியே கிடக்கிறது. இதனால் இந்த மணிமண்டபத்தை காண வரும் சுற்றுலா பயணிகள் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பரிதவிக்கும் நிலை உள்ளது. மணிமண்டபம் அருகே கட்டப்பட்டுள்ள கழிப்பிட வளாகம் திறக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது. இதனால் மணிமண்டபத்தை காணவரும் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த மணிமண்டபத்தை ஒட்டி உள்ள கழிப்பிடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதுடன் மண்டப பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்