பர்கூர் அருகே தடுப்பு கம்பியின் மீது லாரி மோதி விபத்து

லாரி மோதி விபத்து

Update: 2022-07-01 15:45 GMT

கர்நாடக மாநிலம் ராமாபுரத்தில் இருந்து மக்காச்சோளம் பாரம் ஏற்றிய லாரி ஒன்று நேற்று அதிகாலை ஈரோட்டுக்கு புறப்பட்டது. ராமாபுரத்தை சேர்ந்த ராஜா (வயது 30) என்பவர் லாரியை ஓட்டினார். அதிகாலை 4 மணி அளவில் ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக அந்த லாரி வந்து கொண்டிருந்தது. பர்கூர் அருகே செட்டிநொடி என்ற இடத்தில் வந்தபோது எதிர்பாராதவிதமாக ரோட்டோர தடுப்பு கம்பியில் மோதி லாரி விபத்துக்குள்ளானது. தடுப்பு கம்பியில் மோதியதால் மலைப்பகுதியில் இருந்த பள்ளத்தில் கவிழாமல் சாய்ந்தபடி நின்றது. இதுபற்றி அறிந்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிரேன் மூலம் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்