பெண்ணாடம் அருகேநடுரோட்டில் சாய்ந்து விழுந்த புளியமரம்ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பெண்ணாடம் அருகே நடுரோட்டில் சாய்ந்து விழுந்த புளியமரத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பெண்ணாடம்
பெண்ணாடம் அடுத்த பெரியகொசப்பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே திட்டக்குடி- விருத்தாசலம் நெடுஞ்சாலையின் இருபுறமும் பழமை வாய்ந்த புளிய மரங்கள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் நேற்று காலை திடீரென ஒரு பழமை வாய்ந்த புளிய மரம் சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல வழியின்றி நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் மரத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பெண்ணாடம் போலீசார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மரம் சாய்ந்து விழுந்ததால் திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.