பந்தலூர் அருகே கூலித்தொழிலாளர்கள் 2 பேர் தற்கொலை- காரணம் என்ன? போலீஸ் விசாரணை

பந்தலூர் அருகே கூலித்தொழிலாளர்கள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2022-09-20 18:45 GMT

பந்தலூர்

பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 3 பகுதியில் உள்ள குடியிருப்பை சேர்ந்தவர் ஜோய் (வயது 53). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் சேரம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் அங்கு ெசன்று, ஜோயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்-4 பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜெய்சங்கர் (53) என்பவரும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று, ஜெய்சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து, ஜோய், மற்றும் ஜெய் சங்கர் ஆகியோர் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்