பேச்சிப்பாறை அருகே ரப்பர் கழக பகுதியில் உலா வரும் காட்டு யானை

பேச்சிப்பாறை அருகே ரப்பர் கழக பகுதியில் காட்டு யானை உலா வருகிறது. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Update: 2023-06-23 20:39 GMT

குலசேகரம்:

பேச்சிப்பாறை அருகே ரப்பர் கழக பகுதியில் காட்டு யானை உலா வருகிறது. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

தொழிலாளர்கள் அச்சம்

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன் யானை குமரி மாவட்டம் மேல் கோதையாறு அருகே விடப்பட்டுள்ளது. இந்த யானை குறித்த அச்சம் கீழ் கோதையாறு பகுதி மக்களிடம் விலகாமல் இருந்து வருகிறது.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக கீழ் குற்றியாறு மற்றும் மோதிர மலை பகுதியில் இரவு நேரத்தில் யானைக்கூட்டங்கள் புகுந்து வருகின்றன. இவற்றை பேச்சிப்பாறை அருகே ரப்பர் கழக தொழிலாளர்கள் காட்டுக்குள் துரத்தினார்கள். இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் ஒரு காட்டு யானை ரப்பர் கழக கூப்பு எண் 51-க்கும், மோதிரமலைக்கும் இடைப்பட்ட கோதைமடக்கு என்ற பகுதியில் சாலையை கடந்து பேச்சிப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு சரிவுக்குள் சென்றது. இதனை அந்த வழியாக சென்ற மின் வாரியம் மற்றும் ரப்பர் கழகத் தொழிலாளர்கள் பார்த்து அச்சமடைந்தனர்.

காட்டுக்குள் விரட்ட வேண்டும்

அதே வேளையில் அந்த காட்டு யானை, தொழிலாளர்களுக்கு எந்த தொந்தரவும் செய்யாமல் கடந்து சென்றதால் தொழிலாலர்கள் நிம்மதியடைந்தனர்.

இந்நிலையில் இது போன்று உலாவும் யானைகளை காட்டுக்குள் துரத்த வேண்டுமென்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

--

Tags:    

மேலும் செய்திகள்