ஓட்டப்பிடாரம் அருகேதூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ஓட்டப்பிடாரம் அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை சண்முகையா எம்.எல்.ஏ. வழங்கினார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஒட்டநத்தம் கிராமத்தில் கனிமொழி எம்.பி பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ தூய்மை பணியாளர்களுக்கு இலவச அரிசி மற்றும் வேட்டி சேலைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர்கள் அருண்குமார், பிரேமா, சரிதா, அய்யாத்துரை, மாநில தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, ஓட்டப்பிடாரம் வட்டார தூய்மைபணியாளர்கள் ஒருங்கிணைப்பாளர் ஜெயமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை பயிற்றுனர் அதிசயமணி உட்பட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.