ஓட்டப்பிடாரம் அருகே புதிய பஸ் போக்குவரத்து தொடக்கவிழா

ஓட்டப்பிடாரம் அருகே புதிய பஸ் போக்குவரத்து தொடக்கவிழா நடந்தது.

Update: 2022-11-11 18:45 GMT

ஒட்டப்பிடாரம்:

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தெய்வச்செயல்புரம் வழியாக லட்சுமிபுரம் வரை சென்று வந்த டவுன்பஸ்ஸை அக்காநாயக்கன்பட்டி கிராமம் வரை நீட்டிப்பு செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ.வின் முயற்சியால், அக்காநாயக்கன்பட்டியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை புதிதாக நீட்டிக்கப்பட்ட பஸ் போக்குவரத்தை நேற்று எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், தூத்துக்குடியில் இருந்து புதுப்பட்டி சென்ற அரசு டவுன் பஸ்சை தெய்வச்செயல்புரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த பஸ்சையும் அவர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் பழனியப்பன், பஞ்சாயத்து தலைவர்கள் அருண்குமார், பிரேமா, அய்யாத்துரை உட்பட கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.

மேலும், ஓட்டப்பிடாரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். பருவமழை காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழைநீர் தேங்காமல் தடுப்பு ஏற்பாடுகள், மழை வெள்ளச்சேதத்திலிருந்து மக்கள் மற்றும் பயிர்களை காப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், தாசில்தார்கள் நிஷாந்தினி (ஓட்டப்பிடாரம்), செல்வகுமார் (தூத்துக்குடி), ராதாகிருஷ்ணன் (ஸ்ரீவைகுண்டம்), யூனியன் ஆணையாளர் பாண்டியராஜன், யூனியன் கூடுதல் ஆணையாளர் வெங்கடாசலம், ஸ்ரீவைகுண்டம் யூனியன் ஆணையாளர் சுரேஷ், வேளாண்மை துறை உதவி இயக்குனர்கள் ஓட்டப்பிடாரம் சிவகாமி, சந்திரகலா (தூத்துக்குடி), தோட்டக்கலை அலுவலர்கள் ஆசிப், ஜெயந்தன், விஜய், தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர்கள் பிரேம், சித்தி விநாயகமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் தங்கமணி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்